
கோவை மாவட்டம் நீலகிரி மாவட்டத்தில் நான்கு தலைமுறைகளாக செயல்பட்டு வரும் டர்மோனா டீ இண்டஸ்ட்ரீஸ் சார்பில், துடியலூர் அடுத்த வெள்ளகிணர் செல்லும் வழியில் “ப்ளூ ராபின் டீ லவுஞ்ச்” என்ற புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் தொடங்கப்பட்டது துடியலூர் நியூ லைஃப் சிட்டி சர்ச் ரெவரெண்ட் இம்மானுவேல் ஜேக்கப் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, டர்மோனா டீ இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் தினேஷ் ராஜூ, சந்தியா தினேஷ், அபிநவ் தினேஷ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மேத்யூ, ராகுல் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர் இந்த மையத்தில் 100 வகையான டீக்களை அனுபவிக்கும் வசதியுடன், பிளாக் டீ, கிரீன் டீ, ஐஸ் டீ, மாச்சா உள்ளிட்ட பல்வேறு டீ வகைகள் கிடைக்கின்றன. மேலும், 40-க்கும் மேற்பட்ட தேயிலைத் தூள் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன தேயிலைத் தூளில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம், தேயிலை எங்கு, எப்போது பறிக்கப்பட்டது முதல் பேக்கிங் மற்றும் டெஸ்ட் முடிவுகள் வரையிலான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது மேலும், டீ தயாரிக்கும் முறைகள் மற்றும் தரமான தேயிலைத் தூளை கண்டறியும் வழிமுறைகளும் வாடிக்கையாளர்களுக்கு விளக்கப்படுகின்றன. நீலகிரி குரும்பர் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்கள் இயற்கை முறையில் தயாரிக்கும் தேன் உள்ளிட்ட பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
