
கோவைமாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் சார்பில், வடமதுரை ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடத்தப்பட்டு, அவர்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் கனிமொழி சந்தோஷ், “வளைகாப்பு என்பது பெண்களுக்கான நிகழ்ச்சி மட்டுமல்ல; கர்ப்பிணி பெண்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு கணவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் உள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குடும்பத்தினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சத்தான உணவு, போதிய ஓய்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் மனநிம்மதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்றார் நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
