சென்னை, செப்டம்பர் 2025: தமிழ்நாட்டின் தொழில் முனைவுஇயக்கத்தில் ஸ்டார்ட்அப் சிங்கம் ஒரு “கேம் சேஞ்சர்” ஆகஉருவெடுத்துள்ள நிலையில், மாநிலத்தின் முதல் பிரதான ஸ்டார்ட்அப்ரியாலிட்டி ஷோவை உருவாக்கிய பான்ஹெம் வென்ச்சர்ஸ், இன்று தனது இரண்டாவது நிதியமிப்பு சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக அறிவித்தது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த உலகளாவிய தொழில் முனைவோர்களை ஆலோசகர்களும் முதலீட்டாளர்களுமாகஇணைத்துள்ளது.
ஆரம்ப முதலீட்டாளரும் தலைமை மேன்டராகவும் செயல்படும் திரு. குமார் வேம்புவுடன் இணைந்து, புதிய பங்குதாரர்களில் இடம் பெற்றவர்கள்:
• திரு. கோபால் ஸ்ரீனிவாசன், தலைவர் & நிர்வாக இயக்குநர், TVS Capital Funds
• திரு. கிரீஷ் மாத்ருபூதம், நிறுவனர் & செயல் தலைவர், Freshworks; ஜெனரல் பார்ட்னர் – Together Fund
• திரு. மிதுன் சச்சேதி, நிறுவனர், CaratLane
• திரு. கே. மகாலிங்கம், பங்குதாரர்/இயக்குநர், TSM Group of Companies
• திரு. மோகன் கருப்பையா, தலைமை நிர்வாக அதிகாரி & இணைநிறுவனர், IppoPay
• திரு. ஷ்யாம் சேகர், நிறுவனர், ithought Financial Consulting LLP
• திருமதி. அஷ்வினி அசோகன், நிறுவனர், Mad Street Den, Vue.ai
• திரு. மதுசூதனன் ரங்கராஜன், நிர்வாக இயக்குநர், M2P Fintech
இந்த தொழில் முனைவர் முன்னோடிகள் ஒன்றிணைந்திருப்பது, தமிழ்நாட்டின் ஆரம்ப மற்றும் வளர்ச்சி நிலையிலுள்ள ஸ்டார்ட்அப்புகளுக்கும், உலகம் முழுவதும் தமிழரால் உருவாக்கப்பட்ட ஸ்டார்ட்அப்புகளுக்கும் “நிதி திரட்டலைஎளிமையாக்கி, வெற்றி கதைகளை பெருக்குதல்” என்ற ஸ்டார்ட்அப் சிங்கத்தின் நோக்கத்திற்கு வலுவான ஊக்கத்தை அளிக்கிறது. இவர்களின் குழு அனுபவம் முதலீட்டை விரைவுபடுத்தவும், விரிவானதிட்ட வளர்ச்சி வாய்ப்புகளை திறக்கவும், புதிய நிறுவுநர்களுக்குஅசாதாரண வழிகாட்டுதலையும் வழங்கும். இவ்வாறுவலுப்படுத்தப்பட்ட ஆலோசனை குழுவுடன், பான்ஹெம் வென்ச்சர்ஸ்ஸ்டார்ட்அப் சிங்கத்தை ஒரு சாதாரண ரியாலிட்டி ஷோவாக மட்டுமல்லாமல் தொழில்முனைவுத்துவத்தை கொண்டாடும் இயக்கமாகவும், புதுமை, தொழில்முனைவுத்துவம் மற்றும் தமிழ்நாட்டின் டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்குகள் ஒருங்கிணையும் தளமாகவும் உருவாக்கி வருகிறது.
சீசன் 1 இல், ஸ்டார்ட்அப் சிங்கம் தமிழ்நாட்டின் தொழில் முனைவுகளத்தில் முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தை ஏற்படுத்தியது. 35 ஸ்டார்ட்அப்புகள் ₹40 கோடி மதிப்பிலான முதலீட்டுஉறுதிமொழிகளை பெற்றன; அதில் 15 ஸ்டார்ட்அப்புகள் ஏற்கனவே₹13 கோடி நிதியைப் பெற்றுள்ளன. இவ்வமைப்புகள் பெற்ற அடையாளம், அவர்களுக்கு விரைவான விற்பனை, வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்ளல், கூட்டாண்மைகள் போன்ற வேகமான வளர்ச்சியை வழங்கியது. இந்த வெற்றிகரமான தொழில்முனைவோர் பற்றிய உரையாடல்கள் மெட்ரோ, டியர்-2 மற்றும் டியர்-3 நகரங்களில் வீடுகளுக்குள் நுழைந்து, ஸ்டார்ட்அப் கனவுகளை இரவு உணவு மேசை விவாதமாக மாற்றியது. அக்கிரிடெக்,
ஹெல்த்டெக், D2C மற்றும் SaaS துறைகளில் உள்ள நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, ஆயிரக்கணக்கானவர்களை தொழில்முனைவுத்துவத்தில் பாயச் செய்தன.
சீசன் 2 இல், ஸ்டார்ட்அப் சிங்கம் உயர்ந்த இலக்குடன் வருகிறது. முதலீட்டாளர்களிடமிருந்து 100 கோடி ரூபாய் முதலீட்டுஉறுதிமொழிகளைப் பெற்றுள்ளது. நாடு முழுவதும் வந்த 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து 75 ஸ்டார்ட்அப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், பல உலகளாவிய முதலீட்டாளர்களும் முன்னணி வகிக்க உள்ளனர். விரிவாக்கப்பட்ட 26 எபிசோட்கள் கொண்ட சீசன் மூலம், நிறுவனர்களின் பயணங்களை ஒலிபரப்பி, முதலீட்டுக்கு தயாரான பிச்சுகளை வெளிப்படுத்தி, ஸ்டார்ட்அப்புகளை தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சி இயந்திரமாக புதிய தலைமுறைக்கு ஊக்குவிக்கின்றன.
பான்ஹெம் வென்ச்சர்ஸ் நிறுவனர்கள் திரு. ஹேமச்சந்திரன் மற்றும்திரு. பாலசந்தர் கூறியதாவது: “இது பான்ஹெம் வென்ச்சர்ஸுக்கும், தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் சூழலுக்கும் மாற்றம் தரும் தருணம். இத்தகைய முன்னோடியான தலைவர்களின் வழிகாட்டலும் ஆதரவும், முதலீடு மட்டுமல்லாமல், நிர்வாகம், மேன்டார்ஷிப், மற்றும் நெட்வொர்க் ஆகியவற்றையும் ஸ்டார்ட்அப் சிங்கம் தளத்தின் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழங்கும் எங்கள் நோக்கத்தை விரைவுபடுத்தும்.”
தலைமை மேன்டர் திரு. குமார் வேம்பு : “தொழில் முனைவு என்பதுதமிழ்நாட்டின் பொருளாதார முதுகெலும்பு. பான்ஹெம் வென்ச்சர்ஸ்ஸ்டார்ட்அப் சிங்கம் மூலம் உருவாக்குவது உண்மையில் பலன்தருகிறது. எங்கள் புதிய பங்குதாரர்களை வரவேற்கிறேன். அவர்கள், எங்கள் மாநிலத்தின் ஸ்டார்ட்அப்புகளை இன்னும் பெரியதாகவும் சிறப்பாகவும் வளர்க்க உதவுவார்கள்.”
திரு. கோபால் ஸ்ரீனிவாசன், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், TVS கேபிடல் ஃபண்ட்ஸ்: “இந்த மதிப்புமிக்க குழுவில் இணைவது, தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் சூழலை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றும்அரிய வாய்ப்பு. ஸ்டார்ட்அப் சிங்கம் திறமையான நிறுவனர்களைவழிகாட்டுதலும் மூலோபாய (Strategy) முதலீடு சந்திக்கும்தனித்துவமான தளமாகிறது. இந்த மாற்றம் தரும் பயணத்தில் நிறுவுநர்களை ஆதரிக்க ஆவலுடன் உள்ளேன்.”
திரு. கிரிஷ் மாத்ருபூதம், நிறுவனர் & நிர்வாகத் தலைவர், Freshworks; ஜெனரல் பார்ட்னர், டுகெதர் ஃபண்ட்: “தமிழ்நாட்டின் தொழில்முனைவோர் திறன், நகர மையங்களிலிருந்து கிராமப் பகுதிகள்வரை பரந்து விரிந்துள்ளது. பான்ஹெம் வென்ச்சர்ஸ் மற்றும்ஸ்டார்ட்அப் சிங்கத்துடன் இணைவது பணிபுரிவது, அடுத்ததலைமுறை ஸ்டார்ட்அப்புகளை வழிநடத்த, வளங்கள் மற்றும்நெட்வொர்க் வழங்கும் வாய்ப்பைத் தருகிறது.”
திரு. கே. மஹாலிங்கம், பார்ட்னர்/டயரக்டர், TSM குழுமம்:“ஸ்டார்ட்அப் சிங்கம், • “ஸ்டார்ட்அப் சிங்கம், முதலீட்டிற்கு அப்பால், நிறுவுநர்களுக்கு அவர்களின் பயணத்தில் அத்தியாவசியமான மூலோபாய வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் தனித்துவமான ஆதரவை வழங்குகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார, சமூக சூழலை வடிவமைக்கும் முயற்சிகளை ஊக்குவிக்கும் இந்த கூட்டமைப்பின் ஓர் அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.”
திரு. மோகன் கருப்பையா, CEO & இணை நிறுவனர், IppoPay • “பான்ஹெம் வென்ச்சர்ஸில் ஆலோசகராகவும் பங்குதாரராகவும் சேருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கூட்டாண்மை மூலம் ஆரம்ப கட்ட தொழில்முனைவோருக்கு ஆதரவளித்து, அளவுக்கேற்ற தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்க உதவ முடிகிறது.”
திரு. ஷ்யாம் சேகர், நிறுவனர், ithought Financial Consulting LLP:“ஸ்டார்ட்அப்புகளுக்கு முதலீடு மட்டுமல்ல, வலுவான மேன்டார்ஷிப் மற்றும் உறுதியான நெட்வொர்க் அணுகலும் தேவை. பான்ஹெம் வென்ச்சர்ஸில் சேர்வதன் மூலம், நிறுவுநர்களை சவால்களில் வழிநடத்தி, நீண்டகால நிலைத்தன்மையுள்ள நிறுவனங்களை உருவாக்க உதவ விரும்புகிறேன்.”
திருமதி. அஷ்வினி அசோக்கன், CEO & இணை நிறுவனர், Mad Street Den: “பான்ஹெம் வென்ச்சர்ஸும் ஸ்டார்ட்அப் சிங்கமும் இணைந்துள்ள இந்த கூட்டணி, அடுத்த தலைமுறை தொழில்நுட்ப அடிப்படையிலான முயற்சிகளை வடிவமைக்க உதவுவதால் மிகவும் முக்கியமாகும். இது நகரங்களிலும் கிராமங்களிலும் புதுமையை ஊக்குவிக்கிறது.”
திரு. மதுசூதனன் ரங்கராஜன், நிர்வாக இயக்குனர், M2P Fintech:“பான்ஹெம் வென்ச்சர்ஸும் ஸ்டார்ட்அப் சிங்கமும் இணைந்திருப்பது, அடுத்த தலைமுறை தொழில்நுட்ப சார்ந்த முயற்சிகளை உருவாக்க உதவுவதால் அர்த்தமுள்ளதாக உள்ளது. இது நகரங்களிலும் கிராமங்களிலும் புதுமை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.”
பான்ஹெம் வென்ச்சர்ஸ் பற்றி: பான்ஹெம் வென்ச்சர்ஸ், தமிழ்நாட்டின் முதல் பிரதான ஸ்டார்ட்அப் ரியாலிட்டி ஷோஸ்டார்ட்அப் சிங்கம் உருவாக்கிய நிறுவனம். நிறுவனர்கள் திரு. ஹேமச்சந்திரன் மற்றும் திரு. பாலசந்தர் வழிநடத்தும் இந்தநிறுவனம் முதலீடு, வழிகாட்டுதல், கதை சொல்லல் ஆகியவற்றைஒன்றிணைத்து, தொழில் முனைவோர்களுக்கு சக்திவாய்ந்த தளத்தைஉருவாக்குகிறது.
முதல் சீசனில், 35 ஸ்டார்ட்அப்புகள் ₹40 கோடி முதலீட்டுஉறுதிமொழிகளைப் பெற்று, அதில் ₹13 கோடி நிதி ஏற்கனவேவழங்கப்பட்டது. அக்ரிடெக், ஹெல்த்டெக், SaaS, D2C போன்றதுறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாவது சீசனுக்குள், தமிழ்நாட்டின் முன்னணி தொழில் முனைவோர்களின் பங்குதாரரானஆதரவுடன், பான்ஹெம் வென்ச்சர்ஸ் மாநிலத்தின் $1-டிரில்லியன் பொருளாதார நோக்கை முன்னெடுக்கும் சக்திவாய்ந்த சூழலைஉருவாக்கி வருகிறது.
