
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் உளையூர் ஊராட்சிக்குட்பட்ட நெடுயமானிக்கம் கிராமத்தில், ஒருங்கிணைந்த நீர் வள பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் (IWCLP) கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு. சிவகுரு பிரபாகரன், ஐ.ஏ.எஸ்., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு, நிலத்தடி நீர் வளம் உயர்த்தப்பட்டதுடன், சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பாசன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகள் மற்றும் பயனாளிகளுடன் கலந்துரையாடி, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். விவசாய உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும், நிலையான விவசாய முறைகளை ஊக்குவிப்பதற்கும் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.
