திருப்பத்தூர்:03
திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் இன்று காலை 10 மணி அளவில் திருப்பத்தூர் நகரத்தில் மசூதிகளின் வஃக்பு சொத்துக்களை மீட்டு எடுக்க மாபெரும் அறவழி உண்ணாவிரத போராட்டம் சமூக ஆர்வலர் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வாஜித் தலைமையில் நடைபெற்று வருகிறது. மேலும் அண்ணான்டப்பட்டி பகுயில் சுமார் 57.08 ஏக்கர் திருப்பத்தூர் முஸ்லிம் எஜுகேஷன் டிரஸ்ட் 1.91 ஏக்கர் கோட்டை மசூதி சுமார் 27.95 ஏக்கர் தனித்தனியாக மசூதி ஈத்கா 38.29 ஏக்கர் அவுலியா தர்கா சுமார் 04 சென்டு தவக்கல் மக்கான் சுமார் 1.64 ஏக்கர் சொத்துக்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் ரூ 500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டெடுக்க போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாவட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு குறிப்பிடத்தக்கது.
