
பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சியில் பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் புதிய உறுப்பினர் அறிமுக கூட்டம்!
நாட்றம்பள்ளி: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி சேட்டு தலைவர் வட்டத்தில் 10/07/2026 அன்று பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் புதிய உறுப்பினர் அறிமுக கூட்டம் தினகரன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாகமாநில கௌரவ தலைவர் சிவாஜி, மாநில தலைவர் அசோகன், மாநில செயலாளர் மா.கார்த்திகேயன், மாநில பொருளாளர் பாபு, துணைத் தலைவர் பாரி, துணைச் செயலாளர் செந்தில்குமார், சங்க நிர்வாகிகள் பாபு, சுதாகர், மோகன், சங்க உறுப்பினர்கள் லூர்துநாயகம், பெருமாள், தில்லைவாணன், சங்க நிர்வாகிகள் மற்றும் தெக்குப் பட்டு, பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புதிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
