
செங்கல்பட்டு மாவட்டம் -24
நந்திவரம் கூடுவாஞ்சேரியில் ஸ்ரீ நந்திவர்மன் சிலம்பாட்ட களரி கழகம் சார்பில் சிலம்பம் மற்றும் களரி போட்டிகள் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி சிலம்பம் களரி கழகம் ஆசான் எம்.கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கல்பாக்கம் இளம் பகவான் செங்கல்பட்டு மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் செயலாளர் சென்னா கேசவேலு, மாஸ்டர் இராமலிங்கம், தமிழ்நாடு களரி மாநில தலைவர் ஆர், விக்னேஸ்வரன், மாநில செயலாளர் எம்.மாரிக்கண்ணன், நந்திவரம் கூடுவாஞ்சேரி முன்னாள் தலைவரும் நகர திமுக செயலாளருமான எம்கேடி.கார்த்திக் தண்டபாணி, ஊரப்பாக்கம் துணைத் தலைவர் ரேகா கார்த்திக், ஆகியோர் கலந்து கொண்டு சிலம்பம் மற்றும் களரி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற பொறுப்பு தலைவர் வழக்கறிஞர் ஜி. கே.லோகநாதன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தனசேகரன்,கண்ணன், கார்த்திக், பூக்கடை பாபு, சத்தியவான், உட்பட பலர் பங்கேற்றனர்.
