June 30, 2026

Admin

சென்னை, செப்டம்பர் 2025:இந்தியாவின் முன்னணி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு மருத்துவ சேவைகளை வழங்கும் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை, கடுமையான மரபணு கல்லீரல் பிரச்சினையால்...
சென்னை, செப்டம்பர் 2025: உலகளாவிய முன்னணிநிறுவனமான HCL குழுமம், 2,000க்கும் மேற்பட்டபங்கேற்பாளர்களின் ஈர்க்கக்கூடிய வருகையுடன் இன்று HCL சைக்ளோத்தான் சென்னை 2025 இன் மூன்றாவது பதிப்பைவெற்றிகரமாக முடித்தது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து இந்தியசைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பின் (CFI) உதவியுடன் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்த நிகழ்வில், அனைத்து தரப்பு சைக்கிள்ஓட்டுதல் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். தொழில்முறைமற்றும் அமெச்சூர் சைக்கிள் ஓட்டுநர்கள் பல்வேறு பிரிவுகளில்போட்டியிட்டு, மொத்தம் ரூ.33.6 லட்சம் பரிசுத் தொகையைவென்றனர். இது இந்தியாவில் எந்த சைக்கிள் ஓட்டுதல்பந்தயத்திலும் இல்லாத அதிகபட்ச பரிசுத் தொகையாகும். இந்தநிகழ்வில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறையின் தலைமைச் செயலாளர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா, IAS, சிறப்பு விருந்தினராகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையத்தின் (SDAT) உறுப்பினர் செயலாளர் திரு. மேகநாதரெட்டி IAS, கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். தொழில்முறை எலைட் பந்தயம் (50 கி.மீ) கடுமையானபோட்டியைக் கண்டது, ஆண் பிரிவில் RSPB-யைச் சேர்ந்ததிலாவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த எமில் ஜோசப், தமிழ்நாட்டைச்சேர்ந்த ஃபிராமோத் மற்றும் பெண்கள் பிரிவில் ஒடிசாவைச்சேர்ந்த ஸ்வஸ்தி சிங், ஹரியானாவைச் சேர்ந்த ஹிமான்ஷி சிங், RSPB-யைச் சேர்ந்த சாயானிகா கோகோய் ஆகியோர்முதலிடத்தைப் பிடித்து முறையே வெற்றியாளர், இரண்டாம்இடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்றனர். Winners in the other categories are as follow: Category Winner Runners-Up 2nd Runner-up...
சென்னை, 20 செப்டம்பர் 2025 ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் 16-வது பட்டமளிப்பு விழா 2025 செப்டம்பர் 20 அன்று, சென்னை படூரில் அமைந்துள்ள பே ரேஞ்ச் கல்வி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. எரித்ரியா நாட்டின் தூதர்மற்றும் தூதரக அதிகாரிகளின் (இந்தியா) டீன் மாண்புமிகு அலெம் செஹாயே வோல்டெமரியம் அவர்கள், தலைமை விருந்தினராக இந்நிகழ்வில் பங்கேற்றார். நாஸ்காம்...
சென்னை, இந்தியா, 19 செப்டம்பர் 2025: உலகின் முன்னணிஏர் கம்பிரஸர் உற்பத்தியாளர்களில் ஒன்றான எல்ஜிஎக்யூப்மென்ட்ஸ் (BSE: 522074 NSE: ELGIEQUIP), Demand=Match எனப்படும் புரட்சிகரமான புதியதொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு, மாறிக்கொண்டிருக்கும் தேவைகளின் சூழலில்நிலையான ஸ்பீடு கம்பிரஸர்கள் இயங்கும் விதத்தை முற்றிலும்மாற்றுகிறது. நுண்ணறிவு அடிப்படையிலான இந்ததொழில்நுட்பம், கம்பிரஸர் உள்புற காற்றோட்டத்தைசாமர்த்தியமாக மீளச் சுழற்றி, உற்பத்தி நிலையத்தின் உடனடிதேவைக்கேற்ப விநியோகத்தை தானாகச் சீரமைக்கிறது. இதன்மூலம் விநியோகம் எப்போதும் தேவைக்குச் சமமாக இருக்கும்.இதன் விளைவாக, VFD-க்கு இணையான ஆற்றல் சேமிப்புகிடைக்கிறது; அதேசமயம் நிலையான ஸ்பீடு கம்பிரஸர்களின்எளிமையும் வலிமையும் தொடர்கிறது. எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகஇயக்குனர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் கூறுகையில்:“ஒவ்வொரு தொழிற்சாலையிலும் கம்பிரஸ் செய்யப்பட்டகாற்று நான்காவது அடிப்படை பயன்பாடாகும். ஆனால், தேவைகள் ஒருபோதும் நிலையாக இருப்பதில்லை. பெரும்பாலான தொழிற்சாலைகள் நிலையான ஸ்பீடுகம்பிரஸர்களையே பயன்படுத்துகின்றன. அவை தேவைகள்குறைந்தபோதிலும் ஒரே மாதிரியான உற்பத்தியைத்தொடர்ந்து வழங்குகின்றன. எல்ஜி–யின் Demand=Match அமைப்பு இவ்வகை இயந்திரங்களுக்கு நுண்ணறிவைஅளிக்கிறது. இது தானாகவே உடனடி தேவைக்கேற்பவிநியோகத்தைச் சீரமைத்து, வாடிக்கையாளர்களுக்குமின்சாரச் செலவைக் குறைத்து, கூடுதல் செலவு இன்றிஇயந்திரத் திறனையும் ஆயுளையும் மேம்படுத்துகிறது,” என்றார். சிக்கல் : நிலையான உற்பத்தி Vs மாறும் தேவை பெரும்பாலான தொழிற்சாலைகளில் காற்றுத் தேவைகள்நிமிடம் தோறும், பணி முறை தோறும் மாறிக்கொண்டேஇருக்கின்றன. ஆனால் நிலையான வேகக் கம்பிரஸர்கள், cut-in மற்றும் cut-out அழுத்த எல்லைகளுக்கு இடையில் சுழற்சிசெய்வதன் மூலம் மட்டுமே பதிலளிக்கின்றன. இதன் விளைவாக: • அதிகப்படியான மின்சார இழப்பு • தேவையற்ற அழுத்த அதிகரிப்பு • அடிக்கடி சுழற்சிகள் காரணமாக கூறுகளில் அதிகமெக்கானிக்கல் அழுத்தம் • அதிகப்படியான இயக்கச் செலவுகள் மற்றும் குறைந்த ஆயுள்...
சென்னை, செப். 18- ஆண்களுக்கான புரோஸ்டேட் புற்றுநோய், சென்னையில்வேகமாக அதிகரித்து வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறதுஎன்றும், இது குறித்து ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சைஅளித்தால் அதை எளிமையாக குணப்படுத்த முடியும் என்றும்ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அன்ட் யூரோலஜி(AINU) மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து, ஒருமாத விழிப்புணர்வு இயக்கத்தை நடத்த இருப்பதாகவும்கூறியுள்ளது. இதில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் குடும்பபின்னணி மற்றும் மரபியல் தொடர்புடைய நோய் பாதிப்புஉடையவர்கள், ஆரம்ப கால புற்றுநோய் பரிசோதனைசெய்வதன் மூலம் இந்த நோய் கண்டறியப்பட்டால் ” சைலன்ட்கில்லர்” என்று அழைக்கப்படும் இந்த நோய்க்கு தகுந்தசிகிச்சை பெற்று எளிதில் குணமடையலாம். இந்தியாவில் ஆண்களிடம் காணப்படும் முதல் 5 புற்றுநோய்களில் புரோஸ்டேட் புற்றுநோய் தற்போது ஒன்றாகும். இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் இந்த நோய் பாதிப்புஎன்பது தற்போது சென்னையிலும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பிட்ட சில வயதினரிடையே ஆண்டுதோறும் 5.6% பேருக்குஇந்த பாதிப்பு ஏற்படுகிறது. சென்னையில் 65 முதல் 74 வயதுடைய ஆண்கள் அதிக ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர், வயது சார்ந்த நிகழ்வு விகிதங்களைப் பொறுத்தவரை 1 லட்சம்பேருக்கு 59.9 முதல் 75.8 வரையிலும், 75 வயது மற்றும் அதற்குமேற்பட்ட ஆண்களில் 1 லட்சம் பேரில் 161.6 ஆகவும் உள்ளது. புரோஸ்டேட் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறியும்போதுஅதற்கு சிறந்த சிகிச்சை அளிக்க முடியும் என்று AINUமருத்துவமனையின் நிர்வாக இயக்குனர், தலைமை ஆலோசகர்சிறுநீரக மருத்துவர், ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்மற்றும் சிறுநீரக-புற்றுநோய் நிபுணர், டாக்டர் அருண் குமார்பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்கூறுகையில், ஒரு எளிய PSA இரத்த பரிசோதனை மற்றும்மருத்துவ பரிசோதனை என்பது ஒருவரின் வாழ்க்கையின்போக்கையே மாற்றும். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம், ஆரம்பகால பரிசோதனைகள் குணப்படுத்துவதற்கான சிறந்தவாய்ப்புகளை தருகின்றன என்பதை ஆண்கள் அறிந்து கொள்ளவிரும்புகிறோம். மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இணைந்து, ரோபோடிக் அறுவை சிகிச்சை இப்போது ஒப்பிடமுடியாததுல்லியத்தை தருவதோடு நோயாளி விரைவில் குணமடைந்துவீடு திரும்பலாம். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில்அதிநவீன தொழில்நுட்பங்கள் தற்போது வந்துள்ளன. எனவேஇது குறித்து எந்த பயமும் தேவையில்லை. நோயை ஆரம்பநிலையில் கண்டறியும்போது அதற்கு சிறப்பான சிகிச்சைஅளிக்க முடியும் என்று தெரிவித்தார்.  இது குறித்து AINU மருத்துவமனை நிர்வாக இயக்குனர், மூத்தசிறுநீரக மருத்துவர் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சைநிபுணர் டாக்டர் டி. வெங்கட் சுப்பிரமணியம் கூறுகையில்,இந்தியாவில் பலர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைசெய்து கொள்வதை அசிங்கமாகவும் அதை செய்வதற்குதயக்கம் காட்டுகிறார்கள். இதனால் பல நோய்கள் குறித்து ஆரம்ப நிலையில் கண்டறியப்படாமல் அது முற்றிய நிலையில்...
சென்னை, செப்டம்பர் 2025: அவ்தார் மனித மூலதனஅறக்கட்டளை ஆண்டுதோறும் உத்யோக் உத்சவ் என்றதொழில் தொலைநோக்கு நிகழ்வை நடத்துகிறது. ப்ராஜெக்ட்புத்திரி முயற்சியின் கீழ் நடத்தப்படும் இந்த நிகழ்வு, அரசு பள்ளிமாணவிகளுக்கு தொழில் நோக்கத்தை வளர்த்துக் கொடுத்து,பொருளாதார ரீதியாக சுதந்திரமாகவும் சமூக நம்பிக்கையுடனும்இருக்க அவர்களுக்கு வழிவகுக்கிறது. இதன் சென்னை பதிப்பு அவதார் மனித மூலதனஅறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் அவதார்குழுமத்தின் நிறுவனர்-தலைவருமான டாக்டர் சவுந்தர்யாராஜேஷின் தொடக்க உரையுடன் தொடங்கியது.  பின்தங்கிய வாழ்வாதாரத்தை சேர்ந்த மாணவிகளின் நிலையானவேலை நோக்கத்திற்காக முதன்முதலில் புராஜெக்ட் புத்ரிஎன்னும் முன்முயற்சியை அவதார் அறக்கட்டளை துவங்கியது. துவங்கப்பட்ட நாள் முதல் புத்ரி திட்டம் தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் கர்நாடகா முழுவதும் 22,000க்கும்மேற்பட்ட பின்தங்கிய பள்ளி மாணவிகளின் வாழ்க்கையைமாற்றியுள்ளது. 130க்கும் மேற்பட்ட பள்ளிகளின் 8 முதல் 12 ஆம்வகுப்பு வரையிலான மாணவிகள் இந்த திட்டத்தில்ஈடுபடுத்தப்படுகிறார்கள். இத்திட்டம் தலைமைத்துவம், முடிவெடுத்தல், விமர்சன சிந்தனை மற்றும் மீள்தன்மைஉள்ளிட்ட 40 வகையான வாழ்க்கைத்திறன்களில்மாணவிகளுக்கு வாராந்திர பயிற்சி அளிக்கிறது. கூடுதலாக, 10 மற்றும்12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குமனோவியல் மதிப்பீடுகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல்வழங்கப்படுகிறது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளின் உறுதிமொழி, பங்கேற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரங்கள், பல்வேறுபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள், கலைநிகழ்ச்சிகள் புத்ரி மற்றும் நிபுணி மாணவிகளின்உணர்வுபூர்வமான சாட்சியங்கள் மேலும் 4 சிறந்தமாணவிகளுக்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும்தொழில்களின் அறிவுப்பகிர்வு அமர்வுகள் உயர்கல்வி மற்றும்தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தின. 20க்கும் மேற்பட்ட தொழிற் நிறுவனங்கள் பங்கேற்றதன் மூலம், புத்ரி மாணவிகளுக்கான விலைமதிப்பற்ற அறிவுப்பகிர்வுதளத்தை இந்நிகழ்ச்சி வழங்கியது. 2017 ஆம் ஆண்டுதொடங்கப்பட்ட புத்ரி திட்டம் 13 முதல் 18 வயதுக்குட்பட்டபெண்களிடையே தொழில் நோக்கத்தை வளர்ப்பதில் கவனம்செலுத்தும் இந்தியாவின் முதல் முயற்சியாகும். நிகழ்வின் போது டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ் கூறுகையில், “ஒவ்வொரு பெண் குழந்தையும் அர்த்தமுள்ள ஒரு தொழிலைவிரும்ப வேண்டும், தனது வாழ்க்கையையும் பாதுகாப்பையும்பொறுப்பேற்கவேண்டும், பொருளாதார சுதந்திரத்தை அடையவேண்டும். ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும்பணியிடத்தில் நுழைவதில் உள்ள சவால்களை நான்எதிர்கொண்ட போது, ​​எண்ணற்ற பெண்கள் அதேபோராட்டத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். இது ஒரு சமூக நிறுவனத்தை உருவாக்க என்னைத் தூண்டியது, இது இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இரண்டாம்நிலைப்பெண்கள் வேலைக்குத் திரும்புவதற்கு உதவியது. பெண்கள் நிதிரீதியாக சுதந்திரமாக இருக்கும் போது, ​​அவர்கள்தங்கள் சொந்த வாழ்க்கையைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கணிசமாகஉயர்த்துகிறார்கள்.” என்று கூறினார். முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட ரேஸ் நிறுவனர்மற்றும் வெராண்டா போட்டித்தேர்வுகளின் தலைவர் திரு. பாரத்சீமான்,...
தஞ்சாவூர், செப்டம்பர் :  உலகின் ஃபேவரிட் ஜுவல்லர்ஜோய்ஆலுக்காஸ், தஞ்சாவூரில் தனது 2-வது ஷோரூமை 11 செப்டம்பர் 2025 அன்று காலை 11 மணியளவில்பிரம்மாண்டமாகத் தொடங்கி, தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒருமுக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. திறப்பு விழாவில் பல்வேறுமுக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் மற்றும் ஜோய்ஆலுக்காஸ்குழுமத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திறப்புவிழாவை முன்னிட்டு, சலுகை காலத்தில் ஒவ்வொருவாடிக்கையாளரும் தங்களின் ஒவ்வொரு பர்ச்சேஸ்க்கும்உறுதியான இலவச பரிசினையும் பெற்றுச்செல்கின்றனர். இந்த புதிய ஷோரூம், சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்பு, விரிவான வசதிகள் மற்றும் ஒப்பற்ற வாடிக்கையாளர் சேவையைவழங்கும் உறுதிப்பாட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடன்விருதுகள் வென்ற பல பிராண்டு நகைகளின் சேகரிப்புகளும்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜோய்ஆலுக்காஸ், தனதுசிறப்பான பாரம்பரியத்தைத் தொடர்ந்து, தனித்துவமான மற்றும்பல்வேறு நகைகளின் கலெக்ஷன்களை வழங்குகிறது. பாரம்பரியபாணியிலிருந்து நவீன பாணி வரை, மிகப்பெரிய கலெக்ஷன்கள்ஒவ்வொரு விஷேசத்திற்கும், வாடிக்கையாளர்களின்விருப்பத்திற்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு காட்சிப்படுத்தப்பட்ட பிராண்டுகளில் அனுக்ரஹா, டெம்பிள் ஜுவல்லரி, பிரைடு டையமண்ட்ஸ், எலெகன்ஸாபோல்கி டையமண்ட்ஸ், யுவா எவரிடே ஜுவல்லரி, அபூர்வாஆன்டிக் கலெக்ஷன்கள் மற்றும் ரத்னா விலையுயர்ந்த கற்களின்நகைகள் ஆகியவை அடங்கும். மேலும், 2025-ஆம் ஆண்டின்தங்கம் மற்றும் வைரத்தின் புதிய வடிவமைப்புகளும் காட்சிக்குவைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நகை ஆர்வலர்களுக்குமிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்துவது உறுதி. புதிய தொடக்கத்தைப் பற்றி ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஜோய்ஆலுக்காஸ் தெரிவித்த செய்தியில், “தஞ்சாவூரில் எங்கள் புதியஷோரூமைத் தொடங்கியதில் நாங்கள் பெருமகிழ்ச்சிஅடைகிறோம். இந்த விரிவாக்கம், எங்கள் உலகத் தரநகைகளையும், சிறப்பான சேவைகளையும் எங்கள் மதிப்புமிக்கவாடிக்கையாளர்களுக்கு இன்னும் அருகில் கொண்டு செல்லபேருதவி புரிகிறது. ஒவ்வொரு புதிய ஷோரூமும் உலகையேஅலங்கரிக்கும் எங்கள் கனவின் ஒரு படியாக உள்ளது. எங்கள்மீது நம்பிக்கையுள்ள வாடிக்கையாளர்களின் உறுதியானஆதரவினால் இது சாத்தியமாகியுள்ளது. இந்த புதியஅனுபவத்தை பெற்றிட அனைவரையும் அன்புடன்வரவேற்கிறேன்; ஜோய்ஆலுக்காஸில் சர்வதேச ஷாப்பிங்கின்மகிழ்ச்சியை அனுபவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” இந்த புதிய தஞ்சாவூர் ஷோரூம் இப்போது பொதுமக்களின்வசதிகாக்க திறக்கப்பட்டுள்ளது. அனைவரும் வருகை தந்து, ஜோய்ஆலுக்காஸ் தந்திடும் அதிசயத்தையும், பிரம்மாண்டத்தையும் அனுபவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இன்றே வாருங்கள், உயர்தர சேவையும் ஒப்பற்ற தரமும்கொண்ட சிறந்த நகைத் தேர்வுகளை வாங்கி மகிழுங்கள்.