காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (SRMMCHRC), ‘அசோசியேஷன் ஆஃப் ஹெல்த்கேர் ப்ரொவைடர்ஸ் இந்தியா’ (AHPI) வழங்கும் தமிழ்நாடு...
கல்விச் செய்திகள்
சென்னை, 20 செப்டம்பர் 2025 ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் 16-வது பட்டமளிப்பு விழா 2025 செப்டம்பர் 20 அன்று, சென்னை படூரில் அமைந்துள்ள பே ரேஞ்ச் கல்வி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. எரித்ரியா நாட்டின் தூதர்மற்றும் தூதரக அதிகாரிகளின் (இந்தியா) டீன் மாண்புமிகு அலெம் செஹாயே வோல்டெமரியம் அவர்கள், தலைமை விருந்தினராக இந்நிகழ்வில் பங்கேற்றார். நாஸ்காம்...
சென்னை, செப்டம்பர் 2025: அவ்தார் மனித மூலதனஅறக்கட்டளை ஆண்டுதோறும் உத்யோக் உத்சவ் என்றதொழில் தொலைநோக்கு நிகழ்வை நடத்துகிறது. ப்ராஜெக்ட்புத்திரி முயற்சியின் கீழ் நடத்தப்படும் இந்த நிகழ்வு, அரசு பள்ளிமாணவிகளுக்கு தொழில் நோக்கத்தை வளர்த்துக் கொடுத்து,பொருளாதார ரீதியாக சுதந்திரமாகவும் சமூக நம்பிக்கையுடனும்இருக்க அவர்களுக்கு வழிவகுக்கிறது. இதன் சென்னை பதிப்பு அவதார் மனித மூலதனஅறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் அவதார்குழுமத்தின் நிறுவனர்-தலைவருமான டாக்டர் சவுந்தர்யாராஜேஷின் தொடக்க உரையுடன் தொடங்கியது. பின்தங்கிய வாழ்வாதாரத்தை சேர்ந்த மாணவிகளின் நிலையானவேலை நோக்கத்திற்காக முதன்முதலில் புராஜெக்ட் புத்ரிஎன்னும் முன்முயற்சியை அவதார் அறக்கட்டளை துவங்கியது. துவங்கப்பட்ட நாள் முதல் புத்ரி திட்டம் தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் கர்நாடகா முழுவதும் 22,000க்கும்மேற்பட்ட பின்தங்கிய பள்ளி மாணவிகளின் வாழ்க்கையைமாற்றியுள்ளது. 130க்கும் மேற்பட்ட பள்ளிகளின் 8 முதல் 12 ஆம்வகுப்பு வரையிலான மாணவிகள் இந்த திட்டத்தில்ஈடுபடுத்தப்படுகிறார்கள். இத்திட்டம் தலைமைத்துவம், முடிவெடுத்தல், விமர்சன சிந்தனை மற்றும் மீள்தன்மைஉள்ளிட்ட 40 வகையான வாழ்க்கைத்திறன்களில்மாணவிகளுக்கு வாராந்திர பயிற்சி அளிக்கிறது. கூடுதலாக, 10 மற்றும்12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குமனோவியல் மதிப்பீடுகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல்வழங்கப்படுகிறது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளின் உறுதிமொழி, பங்கேற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரங்கள், பல்வேறுபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள், கலைநிகழ்ச்சிகள் புத்ரி மற்றும் நிபுணி மாணவிகளின்உணர்வுபூர்வமான சாட்சியங்கள் மேலும் 4 சிறந்தமாணவிகளுக்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும்தொழில்களின் அறிவுப்பகிர்வு அமர்வுகள் உயர்கல்வி மற்றும்தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தின. 20க்கும் மேற்பட்ட தொழிற் நிறுவனங்கள் பங்கேற்றதன் மூலம், புத்ரி மாணவிகளுக்கான விலைமதிப்பற்ற அறிவுப்பகிர்வுதளத்தை இந்நிகழ்ச்சி வழங்கியது. 2017 ஆம் ஆண்டுதொடங்கப்பட்ட புத்ரி திட்டம் 13 முதல் 18 வயதுக்குட்பட்டபெண்களிடையே தொழில் நோக்கத்தை வளர்ப்பதில் கவனம்செலுத்தும் இந்தியாவின் முதல் முயற்சியாகும். நிகழ்வின் போது டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ் கூறுகையில், “ஒவ்வொரு பெண் குழந்தையும் அர்த்தமுள்ள ஒரு தொழிலைவிரும்ப வேண்டும், தனது வாழ்க்கையையும் பாதுகாப்பையும்பொறுப்பேற்கவேண்டும், பொருளாதார சுதந்திரத்தை அடையவேண்டும். ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும்பணியிடத்தில் நுழைவதில் உள்ள சவால்களை நான்எதிர்கொண்ட போது, எண்ணற்ற பெண்கள் அதேபோராட்டத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். இது ஒரு சமூக நிறுவனத்தை உருவாக்க என்னைத் தூண்டியது, இது இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இரண்டாம்நிலைப்பெண்கள் வேலைக்குத் திரும்புவதற்கு உதவியது. பெண்கள் நிதிரீதியாக சுதந்திரமாக இருக்கும் போது, அவர்கள்தங்கள் சொந்த வாழ்க்கையைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கணிசமாகஉயர்த்துகிறார்கள்.” என்று கூறினார். முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட ரேஸ் நிறுவனர்மற்றும் வெராண்டா போட்டித்தேர்வுகளின் தலைவர் திரு. பாரத்சீமான்,...
சென்னை, செப். கற்பித்தல், கற்றல் வடிவமைப்பு மற்றும்வகுப்பறைகளுக்கான புதிய கண்டுபிடிப்புகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவமிக்க கல்வி ஆராய்ச்சிஅமைப்பான கிரிசாலிஸ் நிறுவனம், பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை மேம்படுத்தும் வகையில்அடுத்த தலைமுறைக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக கிரிசாலிஸ் ஏஐ என்னும் தொழில்நுடுபத்தை இன்று அறிமுகப்படுத்தியது. “திருத்தங்களிலிருந்து இணைப்புகள் வரை” என்ற தலைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், பள்ளிகள் பாரம்பரிய செயல்திறன்கண்காணிப்பிலிருந்து ஒவ்வொரு குழந்தையின் திறனையும்உண்மையிலேயே புரிந்துகொள்ளும் முழுமையான, தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் பயணங்களுக்கு மாற வேண்டியஅவசரத் தேவை குறித்து இதில் கூறப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு சித்ரா ரவி அவர்களால்...
Chennai, July 22, 2025: Pi Approximation தினம் அனைவருக்கும் பரிச்சயமான கணித நிகழ்வு, இதை மையமாகக் கொண்டு நாராயணா குழு பள்ளி மாணவர்களுடன் ஒரு...
எஸ்.ஆர்.எம் கல்விக்குழுமம் மற்றும் எஸ்.ஆர்.எம் கலைஅறிவியல் கல்லூரி விளையாட்டுத் துறை. இந்திவியாவின்தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டில் ஒரு உலகசாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆம் தொடர்ந்து 25 மணிநேரம் இடைவிடாது ஹாக்கி விளையாட்டை மாணவர்களைக்கொண்டு ஆட வைத்து இவ்வுலக சாதனைநிகழ்த்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி ஜூலை 11ம் தேதி காலை9.10 மணிக்கு ஆரம்பித்து ஜூலை 12ம் தேதி காலை 10.10 வரை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல்கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வை எஸ்.ஆர்.எம் கலைஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விளையாட்டுத்துறையும், கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து ஏற்பாடுசெய்திருந்தனர். ஜூலை 11ம் தேதி காலை 9.10 மணியளவில்நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில்எஸ்.ஆர்.எம் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் இரா. வாசுதேவராஜ், எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பநிறுவனம் விளையாட்டு துறையின் இயக்குநர் டாக்டர் R. மோகனகிருஷ்ணன், நோவா உலகச் சாதனை விருதுஅமைப்பின் மதிப்பீட்டாளர் ஆகியோர் முன்னிலையில்நிகழ்ச்சி தொடங்கியது. இச்சாதனை நிகழ்வில் கலைஅறிவியல் கல்லூரி ஹாக்கி அணி வீரர்கள், எஸ்.ஆர்.எம்அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன அணி வீரர்கள்கலந்து கொண்டனர். தொடர்ந்து 25 மணிநேரம் மாணவர்கள்விளையாட்டை சளைக்காமல் விளையாடி இந்த உலகச்சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்நிகழ்வை தொடர்ந்துகண்காணித்து வந்த நோவா உலகச் சாதனை அமைப்பினர்இன்று (12.07.2025.) காலை 10.10. மணிக்கு நிறைவுற்றஇச்சாதனையைப் பாராட்டி உலகச் சாதனை விருதினைஅறிவித்தனர். விழாவில் இந்நிகழ்வு முழுவதையும் ஏற்பாடுசெய்த எஸ்.ஆர்.எம் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும்ஹாக்கி விளையாட்டின் பயிற்சியாளரும் உடற்கல்விஇயக்குநருமான மற்றும் முனைவர் K. கோவர்தனன், இயக்குநர் முனைவர் R. மோகனகிருஷ்ணன், துணைமுதல்வர், நிர்வாக அதிகாரி, கணினி துறைத்தலைவர்ஆகியோர் பங்கேற்றனர். விளையாட்டில் சிறப்பாக விளங்கியமாணவர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நோவாஉலகச் சாதனை அமைப்பினர் பதக்கங்கள் அணிவித்துபாராட்டினர். இந்நிகழ்வு இந்திய அளவில் முதன் முறையாகநிகழ்த்தப்பட்டுள்ளது என்பது பெருமிதத்துக்குரியது.
குருந்தன்கோடு வட்டாரத்தில் மாவிளைப் பகுதியில் வசிக்கும் வேளாண் விவசாயி செந்தில்குமார் வாழைத் தோட்டத்தில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் “வாழைத்தார் உறை” பற்றிய...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீ சங்கரா வித்யாலயா நர்சரி பிரைமரிஸ்கூள் பள்ளி 28 வது ஆண்டு விழா பரமக்குடி தேவர் மகாலில் நடந்தது...
கல்வித்துறையில் ரோபோடிக்ஸ் மூலமாக ஒரு புதிய புரட்சியை மைபோட் வென்ச்சர்ஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி விவேக் திலிப் கூறியதாவது,...
சென்னை : பிரிட்டிஷ் கவுன்சிலின் மொழி சோதனை மற்றும் மதிப்பீடு குறித்து அதன் முதன்மை மாநாடான (flagship conference) புதிய டைரக்ஷன்ஸ் சவுத்...
