–

கோவை மாவட்டம் திண்டுக்கல் நத்தம் NPR கல்லூரியில் நடைபெற்ற 40-வது ஜூனியர் தடகளப் போட்டியில், கோவை மாவட்ட தடகள அணி ஒட்டுமொத்தமாக 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தது. தொடர்ந்து 6-வது முறையாக 2-ம் இடத்தைப் பெற்ற கோவை அணி, 14 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களை வென்றது மாணவர்,மாணவியர் பிரிவுகளில் தலா 2-ம் இடமும், U14 மாணவர்கள், U16 மாணவர்கள், U18 மாணவியர் பிரிவுகளில் முதலிடமும் பெற்றனர் வெற்றி பெற்ற வீரர்,வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட தடகள சங்கத் தலைவரும், தமிழ்நாடு தடகள சங்க துணைத் தலைவருமான டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின், எம்.எல்.ஏ.வாழ்த்து தெரிவித்ததுடன், ரூ.50,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்க செயலாளர் சம்சுதீன், பொருளாளர் முனைவர் ஜான் சிங்கராயர், தொழில்நுட்பத் தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் சரவண காந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, பயிற்சாளர்கள் நந்தகுமார், ராஜேஷ், Rotary Club of Akkuruthi தலைவர் தேன்மொழி, செயலாளர் மஞ்சுளா ஜோசப், குழு உறுப்பினர் மீனா ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
