தமஜக. மாநிலச் செயலாளர் உமர் பாரூக் பாராட்டு!

அனைத்து சமுதாய மக்களும் போற்றும் வகையில் பணி செய்த
தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவர் பீர் முகைதீனுக்கு
தமஜக. மாநிலச் செயலாளர் உமர் பாரூக் பாராட்டு!
நெல்லை.அக்9
ஐந்து ஆண்டுகள் அனைத்து சமுதாய மக்களும் போற்றும் வகையில் சிறப்பாகப் பணியாற்றிய திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வி.எஸ். பீர் முகைதீனின், மக்கள் நல சேவையை கௌரவிக்கும் வகையில் புரட்சியாளர் பழனி பாபா பேரவை மற்றும் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநிலச் செயலாளர் தாழை. என்.உமர் பாரூக் தலைமையில் தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வி.எஸ். பீர் முகைதீனை, த.ம.ஜ.க. மாநிலச் செயலாளர் தாழை. என்.உமர் பாரூக், பொன்னாடை மற்றும் பழக்கூடை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
அப்போது தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தாழையூத்து கிளைச் செயலாளர் சேக் இப்ராஹிம் மற்றும் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கணேசன், இசக்கி, இ.பி. பீர் முகம்மது, டைல்ஸ் முருகன், செல்வம், சசிக்குமார் சுந்தர், வள்ளி, அமுல் ஆகியோரும் உடன் இருந்து தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வி.எஸ். பீர் முகைதீனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
