
அத்திப்பட்டு ரெட்டிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.
பொன்னேரி ஜுலை-3
திருவள்ளூர் மாவட்டம்,அத்திப்பட்டு ஊராட்சி,ரெட்டிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள
அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன்
ஸ்ரீ வேணுகோபால் சுவாமி சமேத மற்றும்
ஸ்ரீதேவி பூதேவி சமேத
ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள்
கோவில் கும்பாபிஷேக விழா யாக கலச பூஜையுடன் கும்பாபிஷேக விழாவிற்கான முக்கிய சடங்குகள் தொடங்கி அருள்மிகு வேணுகோபால்சுவாமி, லட்சுமி நரசிம்மர்,ஸ்ரீ ராமர்,சீதா மற்றும் லட்சுமணர் நவகிரகம் ஆகிய தெய்வங்களின் சிலைகளுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது,
கோவிலின் முக்கிய கோபுர கலசங்களுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவின் நிறைவாக, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரானது தெளிக்கப்பட்டது.இந்த விழாவில் அத்திப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர் இதில் கோவில் குருக்கள்
தண்டபாணி
ஆலய ஸ்தபதி குணசேகரன் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் சேவா சங்கம் தலைவர் லயன் பி.பாபு ரெட்டி செயலாளர் ஆர். தேவதாஸ் ரெட்டி மற்றும்
முன்னாள் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி,அத்திப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல்,துணைத்தலைவர் கதிர்வேல்,காட்டுப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி உள்ளிட்ட கோவில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
