
சேலம்-24
மக்கள் தேசம் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தாவது,
சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுக்கா ஓதியத்தூர் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை உடனடியாக திறக்க வேண்டும் என்றும்,மேலும் மூடப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை உடனடியாக திறக்க வேண்டும் என்பதே தங்களுடைய நோக்கம் என்றும் கூறினார்.மேலும் இந்த பிரச்சினையில் கைது செய்துள்ள 50 நபர்களுக்கு மேல் உள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும்,15 நபர்களுக்கு மேல் கைது செய்து பதிவு செய்துள்ள
எப்.ஐ. ஆர்.ஐ உடனடியாக எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும்,அப்படி இல்லை என்றால் சேலம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் தேசம் கட்சியின் சார்பில் மிக பெரிய போராட்டம் நடை பெறும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்வின் போது
மக்கள் தேசம் கட்சியின் மாநிலத்தலைவர் ஆசைத்தம்பி ,மாநில துணை செயலாளர்
சி.எம்.சுலைமான்,மாநகர மாவட்ட செயலாளர் வீராணம் அம்பேத்கர்,
நிர்வாகிகள் குலந்தைராஜு,சதிஷ்,மணி மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
