
திருப்பத்தூர் மாவட்டம்-24
நாட்றம்பள்ளி தாலுக்கா நாட்றம்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தானம் அறக்கட்டளை மானாவாரி விவசாய மேம்பாட்டு திட்டம் நாட்றம்பள்ளி வட்டார உழவராக மகாசபை விழா 2026 தானம் அறக்கட்டளை பழனிச்சாமி மற்றும் வட்டார செயற்குழு உறுப்பினர் மாடசாமி என்ற மதன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக நாட்றம்பள்ளி வேளாண்மை அலுவலர் சுரேஷ் மற்றும் மேலாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் அர்ச்சனா கலந்துகொண்டு சிறப்புத்தனர். மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றி சிறப்புரையாற்றினர். பரதநாட்டிய நிகழ்ச்சிகள் தானம் அறக்கட்டளை மானாவாரி விவசாய மேம்பாட்டு திட்டம் குறித்து எடுத்துரைத்தார்கள். வேலூர் மண்டல கொள்கை கருத்தரங்கு புத்தக வெளியீட்டு விழா ஆண்டு அறிக்கை மற்றும் ஆண்டு செயல்திட்டம் உழவரக வட்டார செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகம் மற்றும் மண்டல வட்டாரங்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர். உடன் விவசாயிகள் மற்றும் மகளிர் விவசாயிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
