
செங்கல்பட்டு நகராட்சியிலுள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு இலட்சம் விதை பந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளி கல்வித்துறை மற்றும் மனித உரிமைகள் மற்றும் நலன்புரி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவிகளுடன் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக. ஆலம்,புங்கம்,அத்தி,வேம்பு உள்ளிட்ட நாட்டு மரவிதைகளை கொண்டு ஒரு இலட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநிறைச்செல்வி,மனித உரிமைகள் மற்றும் நலன்புரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் ஜெயக்குமார் மற்றும் செயலாளர் சங்கர்,பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்,மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
