
திருப்பத்தூர் மாவட்டம், செப்-3
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட இளம் வயது கர்ப்பம் (Teenage Pregnancy) தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.கு.ரவிகுமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று 03.09.2026 நடைபெற்றது.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் விஜயகுமாரி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், வாணியம்பாடி துணைக்காவல் கண்காணிப்பாளர் மகாலட்சுமி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.நா.கலுசிவலிங்கம், மாவட்டக்கல்வி அலுவலர் தாம்சன் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் உள்ளனர்.
