இணைந்து சிறுதாமூர் ஸ்ரீனிவாசசா அறக்கட்டளை சாதனை


ராமங்கள் தோறும் அரசுப் பள்ளிகளுக்கு இலவச பெஞ்சுகள்
‘கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டம்
எஸ்.பி.ஓ.ஏ, கல்வி அறக்கட்டளையுடன்
இணைந்து சிறுதாமூர் ஸ்ரீனிவாசசா அறக்கட்டளை சாதனை சிறுதாமூர், ஜூலை 7:
தமிழ்நாடு கிராமப்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ‘கற்றல் வசதியில் கல்வி’ (Educate@Comforts) என்னும் திட்டத்தை 2025 ஜூலை மாதம் சிறுதாமூர்
ஸ்ரீனிவாசா அறக்கட்டளை அறிமுகப்படுத்தி இதன் பணியாக கிராமங்களில்
செயல்படும் அரசுத் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி
ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பறையில் உட்காருவதற்கு
பெஞ்சுகளும் எழுதுவதற்கு மேசைகளும் வழங்கிவருகிறது. தமிழ்நாட்டில்
பெரும்பாலான கிராமப்புற அரசுப் பள்ளிகளில், போதுமான இருக்கைகள் /
மேசைகள் இல்லாததால், மாணவர்கள் வகுப்பறைகளில் தரையில் அமர்ந்து
படிக்க வேண்டியுள்ளது. நீண்ட நேரம் தரையில் அமர்ந்திருப்பது, முதுகெலும்பு
வட்டுகளின்மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது. காலப்போக்கில், முதுகுவலி மற்றும் முதுகெலும்பு
குறைபாடுகள் போன்ற கடுமையான நிலைகளுக்கு வழிவகுக்கும். இவ்வாறு
குறுகி அமர்ந்து செயல்படுவது நுரையீரல் கொள்ளளவைக் குறைக்கவும்
செய்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வகுப்பறைகளில் மாணவர்களின் கற்றல் வசதியை மேம்படுத்த மிகச்சரியான
இருக்கை வசதிகளை (Ergonomic seating) வழங்குவதன் மூலம் மாணவர்களின்
உடல்நலனுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் கற்கும் திறனை
மேம்படுத்தவும் இயலும் என்பதனால் ‘கற்றல் வசதியுடன் கல்வி’ (Educate@Comforts)
திட்டத்தை இதன் நிறுவுனர் – தலைவர் கவிஞர்
விஜயகிருஷ்ணன் தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.
கற்றல் வசதியுடன் கல்வி’ (Educate@Comforts) திட்டத்தின் கீழ் சென்ற மாதம்வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கும் ஆறு அரசுப் பள்ளி வகுப்பறைகளுக்குத் தேவையான இருக்கைகள் மற்றும் எழுது மேசைகள்
வழங்கப்பட்டன. உரியகாலத்தில் செய்யப்பட்ட இந்த வசதியினால் மாணவர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து இவ்வாறே அவ்வட்டாரத்தில்
உள்ள அரசுத் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் ‘கற்றல் வசதியுடன்
கல்வி’ திட்டத்தை செயல்படுத்தி உதவ வேண்டுகோள் விடுத்தனர்.
‘கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டத்தின் தொடர்பணியாக சிறுதாமூர்
ஸ்ரீனிவாசா அறக்கட்டளை பெருநகரங்களில் செயல்படும் தனியார் பள்ளிகள்
மற்றும் கல்லூரிகளைத் தொடர்புகொண்டு அந்நிறுவனங்களில்
பயன்படுத்தப்படாமல் உள்ள அதேநேரம் பயன்படுத்தக்கூடிய இருக்கைகள்
மற்றும் மேசைகளை நன்கொடையாகப் பெற்று அவற்றை சீர்செய்து,
வண்ணம் தீட்டி தேவைப்படும் கிராமப்புற அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளுக்கு
வழங்குகின்றது. தளவாடப் போக்குவரத்து மற்றும் புதுப்பித்தல் செலவுகளை
அறக்கட்டளையே ஏற்கிறது.
இந்த திட்டத் செயலாக்கம் அரசின் நிதி உதவியின்றி மேற்கொள்ளப்படுகிறது.
அனைத்து தளபாடங்களும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக ஏற்றதுஎன்பதை உறுதி செய்ய, முழுமையான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத்
தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. ‘கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டத்தின்
தொடக்க இலக்கென்பது அமரும் இருக்கைகள் மற்றும் எழுது மேசைகள்
தேவைப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கும் அரசு தொடக்கப்பள்ளி
மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு இவற்றை வழங்குவதேயாகும்.
பின்னர் இத்திட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும்
விரிவுபடுத்தப்படும் மேலும் அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும்
வட்டாரக் கல்வி அலுவலர்களைத் தொடர்புக்கொண்டு வகுப்பறைகளுக்குத்
தேவையான இருக்கை மற்றும் எழுது மேசைகளின் எண்ணிக்கையை அறிந்து
‘கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டதின்மூலம் வழங்கும் நடவடிக்கையில் இந்த
அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
சென்னையில் உள்ள SBOA பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி மற்றும் சின்மயா வித்யாலயா
தாங்கள் பயன்படுத்தாத, பயன்படுத்தக்கூடிய இருக்கைகள் மற்றும் எழுது மேசைகளை ‘கற்றல் வசதியுடன்
கல்வி’ திட்ட செயல்பாட்டிற்காக வழங்கியுள்ளது.
இவை அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் கல்வி வட்டாரத்தில் இயங்கும் அரசுபள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இருக்கை மற்றும் எழுது மேசைகளை மதுராந்தகம் வட்டம் வேப்பங்கரணை, அத்திவாக்கம், முருங்கை, மாம்பட்டு, கொங்கரை, மொறப்பக்கம், தின்னாலூர், கீழ் அத்திவாக்கம், களத்தூர் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கும் விழா அப்பள்ளி வளாகத்தில் இன்று (07-07-2026) நடைபெற்றது.
செங்கற்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு எம். வீரப்பன் இ ஆ ப அவர்கள் முதன்மை விருந்தினராக இவ்விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கான
இருக்கைகளை பள்ளிகளுக்கு வழங்கினார்.
கவிஞர் விஜயகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் திரு. கமலக்கண்ணன், ஆச்சிறுப்பாக்கம் ஒன்றியப் பெருந்தலைவர் திரு. கண்ணன் , வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு. சிவராமகிருஷ்ணன், திரு. மணிவண்ணன்,, சிறுதாமூர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. மாரியப்பன், ஆசிரியர் பயிற்றுனர், திரு. ராஜபாரதி, பள்ளித்தலைமை ஆசிரியர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவவிழாவில் கலந்துகொண்டனர்.
முன்னதாக சிறுதாமூர் பள்ளியில் எட்டாம் வகுப்புத் துவக்கவிழா நடைபெற்றது. சென்னை தாம்பரம் காமதேனு அறக்கட்டளை வழங்கிய நோட்டுப் புத்தகங்கள் நான்கு அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.
