
அருள்மிகு ஸ்ரீ தோணியப்பர் சமேத பெரியநாயகி ஈஸ்வரன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா.வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தாலுக்கா லத்தேரி அடுத்த பி.என்.பாளையம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ தோணியப்பர் சமேத பெரியநாயகி ஈஸ்வரன் திருக்கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து நடைபெற்ற 48 வது நாள் மண்டல பூர்த்தி பூஜை விழாவில் யாகசாலை பூஜைகள் கோ பூஜை சிறப்பு வேள்விகள் சுவாமிகளுக்கு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண வைபவமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஆலய விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் பலர் திரளானோர் கலந்து கொண்டனர். விழாவில் யாகசாலை பூஜைகளில் வைக்கப்பட்டுள்ள கலசங்களை பக்தர்களுக்கு ஆலய விழா குழுவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் வழங்கினர்.
