
கோவை மாவட்டம் ஜூலை- 7 லுலு ஹைப்பர்மார்க்கெட் சார்பில் எண்ட் ஆஃப் சீசன் சிறப்பு விற்பனை ஜூலை 9 முதல் 12 வரை நடைபெறுகிறது இந்த 4 நாள் விற்பனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு பிளாட் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மளிகை மற்றும் உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், எலெக்ட்ரானிக்ஸ், மொபைல் போன்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகளும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
லட்சுமி மில்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள லுலு ஹைப்பர்மார்க்கெட்டில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனை தினமும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை அறிமுக நிகழ்ச்சியில் லுலு மண்டல மேலாளர் மகேசன், பொது மேலாளர் பாலாஜி, கொள்முதல் மேலாளர் சுனில் மேனன் மற்றும் சூப்பர்மார்கெட் மேலாளர் சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அதிக சேமிப்புடன் ஷாப்பிங் செய்யுமாறு லுலு நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. அதிக சேமிப்பு அதிக மகிழ்ச்சி என்ற வாசகத்துடன் இந்த மெகா விற்பனை நடைபெறுவது குறிப்பிடதக்கது
